"எண்ணெய்" புரட்சியில் வீழ்ந்த கடாஃபி...!
மது இல்லை... நடனக் கூடங்கள் கிடையாது... வீதிகளில் கைகோத்த காதலர்களைப் பார்க்க முடியாது... பொது இடங்களில் பெண்கள் பேசுவது கூட குற்றம். ஆனால், மேற்கத்தியப் பாலியல் படங்களைப் பார்க்க, இணையதள மையங்களில் நிரம்பி வழியும் இளைஞர்கள்... இதுதான் லிபியா..!
மம்மர் கடாஃபியின் ஆட்சியில் ஒரு புறம் மக்களின் சுதந்திரமும் ஜனநாயகமும் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்த நிலையில்... மறுபுறம் அவர்கள் உலக நாடுகளை வேட்கையோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
கடாஃபி ஒவ்வொரு லிபியனுக்கும் கல்வி முதல் கழிப்பறை வரை எல்லா வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், அவர்களிடம் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டார். அவற்றைக் கேட்டவர்களுக்கு மரணத்தை மட்டுமே அவர் பதிலாக அளித்தார். ''இந்தப் புவிக்கோளத்தில் ஜனநாயகம் என்பது எங்குமே இல்லை, லிபியா நீங்கலாக..!'' என்றார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரமாண்ட விழா ஒன்றில், 'அரசர்களுக்கு எல்லாம் அரசர்’ என்று தனக்குத் தானே பட்டம் சூடிக்கொண்டார் கடாஃபி. உண்மையாகவே தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டார். ஆங்கில நாட்காட்டி முறைக்கு மாற்றாகப் புதிய நாட்காட்டி முறையை அவர் உருவாக்கியதாகட்டும்; அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காண்டலீனா ரைஸைக் காதலிக்கிறேன் என்று சொன்னதாகட்டும்; ஐ.நா. சபையில் உரையாற்ற 15 நிமிஷம் அனுமதி வழங்கப் பட்டபோது 100 நிமிஷங்கள் இடைவிடாது பேசி வெறுப்பேற்றியதாகட்டும்... எல்லாமே அந்த எண்ணத்தின் வெளிப்பாடுகள் தான்.
மன்னர் இத்ரிஸிடம் இருந்து 1969-ல் ரத்தமில்லா ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்ததில் தொடங்கி, ஆட்சியில் இருந்த 42 ஆண்டுகளும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார் கடாஃபி. ''அப்துல் நாசர் என் வழிகாட்டி. ஸ்டாலினும், ஹிட்லரும் என் முன்மாதிரிகள்..!'' என்று சொன்னவர், தனது சித்தாந்தங்கள் அடங்கிய 'பச்சைப் புத்தகம்’ (கிரீன் புக்) உலகின் போக்கையே மாற்றும் என்று நம்பினார்.
உலகின் எண்ணெய் வளத்தில் இரண்டு சதவிகிதத்தைப் பெற்று இருக்கும் லிபியாவில் கிடைக்கும் எண்ணெய், முதல் தரமானது. குறைந்த சுத்திகரிப்புச் செலவுகளே போதும். மேலும், இன்னமும் ஆய்வை விரிவுபடுத்தினால், லிபியாவின் எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த முடியும். இதனால், எப்போதுமே லிபிய எண்ணெய்ச் சந்தையைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தன அமெரிக்க - ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள்.
ஆனால், கடாஃபியோ தேசிய எண்ணெய் நிறுவனம் மூலம் நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை லிபிய அரசு வசம் வைத்துக்கொண்டார். மேலும், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றாக சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எண்ணெய் வர்த்தக உறவை உருவாக்கிக்கொண்டார். தவிர, விடுதலைக்காகப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கு உதவுவதை கடாஃபி வழக்கமாகக்கொண்டு இருந்ததால், மேற்கு உலகம் எப்போதும் அவரை வெறுப்புடனே பார்த்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் வெளிப்படையாகவே 'பைத்தியக்கார நாய்’ என்று கடாஃபியை வர்ணித்தார். அப்போது, ''அமெரிக்கா உலகின் அழிவு சக்தி. அமெரிக்கர்கள் என்னைப் பாராட்டினால்தான் நான் வெட்கப்பட வேண்டும்..!'' என்று சொன்னார் கடாஃபி.
இன்றைய சூழலை அவர் ஓரளவுக்கு யூகித்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ''லிபியா கூடிய விரைவில் புதியதோர் அரசியல் யுகத்துக்குள் நுழையப் போகிறது...'' என்று சொன்ன அவர், நாட்டின் ராணுவம், உள்துறை, வெளியுறவுத் துறைகள் நீங்கலாக, அனைத்துத் துறைகளுக்கும் நேர்மையான தேர்தல் நடத்தத் திட்டமிட்டார். எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் வகையில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க இருந்தார். ஆனால் பதவி வெறி, அவர் தவறுகளில் இருந்து அவரை மீள்வதற்கான பாதைகளை வலுவாக அடைத்து விட்டது.
அரபு உலகப் புரட்சியின் தொடர்ச்சியாக லிபிய மக்களும் கிளர்ச்சியில் இறங்கியபோது, அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுடன் எண்ணெய் நிறுவனங்களும் பின்னின்று சவக்குழியைத் தோண்ட... பாதாளத்தில் வீழ்த்தப்பட்டார் கடாஃபி. 'லிபியாவின் சுதந்திரம்’ என்று கடாஃபியின் மரணத்தைக் கொண்டாடுகிறார்கள், லிபிய மக்கள். முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது. அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அமைத்துள்ள பொம்மை அரசாங்கத்திடம் இருந்து உண்மையான சுதந்திரத்துக்காக இன்னொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் விரைவில் அவர்களுக்கு ஏற்படலாம்...!
நன்றி..- ஜூனியர் விகடன்..
Righteous Kill
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Quisque sed felis. Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in ...

Quisque sed felis
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Quisque sed felis. Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in ...

Etiam augue pede, molestie eget.
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Quisque sed felis. Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in ...

Posting Komentar